கல்வி மற்றும் நடத்தைக்கான விதிமுறை[1]
வேதம் கற்பதன் குறிக்கோள் மந்திரங்களை மனப்பாடம் செய்வது மாத்திரம் அல்ல. பாடத்தின் பொருளையும் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும். பண்டைய அறிஞர்கள் பலர் குருட்டு மனப்பாடத்தை கண்டனம் செய்தும், பொருளுணர்ந்து (தியானித்து) பயில்வதைப் போற்றியும் உள்ளனர். இவ்வாறிருப்பினும், பல நூற்றாண்டுகளாக வேதம் பயின்றவர்கள் பொருளறியாமல் அவற்றை மனனம் மாத்திரமே செய்து வந்தனர். இது இன்றும் தொடர்கிறது.
பிரம்மசாரியின் நடத்தைக்கான...
சந்தியா[1] என்றால் அந்தி நேரம் என்றாலும் காலை, மாலை என இரு வேளைகளிலும் சந்தியா வந்தனம் செய்யப் படுகின்றது.[2] சூரியனைப் போற்றும் இச்சடங்கை நாம் ‘sandhyopāsana’ என்றோ ‘sandhyāvandana’ என்றோ அல்லது வெறுமே ‘sandhyā என்றோ அழைக்கிறோம்.[3] 'சந்தியா' என்பது 'இரவு பகலை சந்திக்கும் வேளையையோ (அதிகாலை)' அல்லது 'பகல் இரவை சந்திக்கும் வேளையையோ (அந்திமாலையையோ)' குறிக்கும் சொல். முதலாவது ‘prātaḥ-sandhyā’, பின்னது ‘sāyaṃ-sandhyā.’
சந்தியா வந்தனத்தை ஒரு நாளைக்கு...
பிரம்மசாரி தர்மம்-மாணவனுக்கான விதிமுறைகள்[1]
பிரம்மசாரி அக்னியைச் சுற்றி வலம்வந்து ஆஹுதி அளித்ததும், "நீ ஒரு மாணவன். நீர் அருந்து. அமைதியைக் கடைபிடி. சமித்தை அக்னியில் இடு..."[2] என்றெல்லாம் ஆசாரியர் மாணவனுக்கான விதிமுறைகளை அவனுக்கு போதிக்கிறார். "நீரைப் பருகு. சந்தேகமில்லாமல், நீரே அம்ருதம்! நீ இந்த அம்ருதத்தைப் பருகு! உன் கடமையைச் செய். சந்தேகமில்லாமல், கடமையே வீரியம். வீரியத்துடன் இரு! அக்னியில் சமித்தை இடு. உன் மனதில் ஞான விளக்கை ஏற்று....
தண்டம்-கோல்[1]
ஆசாரியர் மாணவனுக்கு தண்டத்தை(கோலை) வழங்கும்போது, அவன், "எனது தண்டம் கீழே விழுந்துவிட்டது, அதனை நான் எனக்கு நீண்ட ஆயுள் கிட்ட வேண்டியும், பிரம்மசரிய மார்க்கத்தில் என்னை வழிநடத்தவும், எனது மாணவ-வாழ்க்கையின் துவக்கத்தைக் குறிக்கவும் மீண்டும் என் கையில் எடுத்திருக்கிறேன்", என்று கூறி தண்டத்தைப் பெற்றுக் கொள்கிறான்.[2] உடல், மனம், வாக்கு இவைகளின் கட்டுப்பாட்டை 'தண்டம்' உணர்த்துகிறது.
மாணவப் பருவமே ஒரு பெரும் யக்ஞம் என கருதப்பட்டதால்,...
மேகலை அணிவித்தபின் அச்சிறுவனுக்கு பூணூல்(யக்ஞோபவீதம்) அணிவிக்கப்படுகிறது.[1] யக்ஞோபவீதம் என்பது பவித்திரமான பூணூல் என்று இப்போதை உள்ளதைப்போல அப்போதெல்லாம் கருதப்பட்டு வந்ததாகத் தெரியவில்லை[2], எனினும் பிற்காலங்களில் இதுவே உபநயன சடங்கில் கவனத்துக்குரிய பிரதான கட்டமானது.[3] பிற்காலங்களில் இளம் வடுவுக்குப் பூணூலை வழங்கி அவனை, "யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம்", என்கிற பிரபலமான வரியை உச்சரிக்கச் செய்தார்கள்.[4]
கலியாணமாகாத பிராம்மண கன்னி நெய்ந்த...
உபநயனத்திற்கான ஏற்பாடுகள்[1]
உபநயனம் நடைபெற ஒரு śālā (விதானம், கூடாரம்) அமைக்கப்படுகிறது.[2]
உபநயனத்துக்கு முன் புராண நிகழ்ச்சிகள் சில நடைபெறுகின்றன. விநாயகனை வணங்கியபின், ஸ்ரீ, லக்ஷ்மி, திருதி (Dhṛtī), மேதா, புஷ்டி, ஸ்ரத்தா (Śraddhā), மற்றும் சரஸ்வதி முதலான தேவிமார்களை வழிபடுகிறார்கள்.[3] பொதுவாக, இதோடுகூட உதக சாந்தி மந்திரங்களும் ஓதப்படுகின்றன.
ஒரு சில இடங்களில், வடுவுக்கு மஞ்சளும் பூசப்படுகின்றது. இதன்பிறகு அவன் அந்த ராத்திரி பொழுதை அமைதியாக...
ஒரு பாலகனுக்கு உபநயனம் நடத்த தகுந்த வயது குறித்த கோட்பாடுகள் வித்தியாசப்படுவதைக் காண்கிறோம்(அந்த பாலகனை ‘vaṭu’ என்றழைக்கின்றனர்).[1] இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவ்வயது கருத்தாக்கத்திலிருந்து கணிக்கப்படுகிறது என்பதே.[2] குழந்தையின் வயதைக் கணிக்கும் வழக்கம் பாரத தேசத்தில் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.
பிராம்மணனாயின் எட்டு வயதில்(கண்டிப்பாக பதினாறு வயதுக்குள்) உபநயனமும், க்ஷத்திரியனாயின் பதினோறு வயதில்(கண்டிப்பாக இருபத்திரண்டு...
பிராம்மண, க்ஷத்ரிய, வைஷ்யர்களிலுள்ள ஆடவர்கள் மாத்திரமே வேதம் பயில தகுதி பெற்றவர்கள் என்று நம் மூதாதையர்கள் பலர் கருதி வந்தனர்.[1] உபநயனம் என்பது வேதம் கற்பதற்கான சடங்காக அமைந்ததால் அனைத்து வர்ணத்தாரினது பெண்களுக்கும், சூத்திரர்களுக்கும் உபநயனம் செய்விக்கப்படவில்லை.[2]
இதற்கு சில விதிவிலக்குகளும் இருந்தன. உதாரணத்துக்கு பாதரீ ஆசாரியர் (Ācārya Bādarī) என்பார்[3], சூத்திரர்கள் உட்பட அனைவருக்குமே வேத யக்ஞங்கள் செய்வதற்கான தகுதி உள்ளது என்கிறார்....
அநேகமாக சூத்திர (Sūtra) காலத்தில்தான் உபநயனச் சடங்கு முழுதும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கக்கூடும்.[1] கிருஹ்ய சூத்திரங்களில் (gṛhya-sūtras) அச்சடங்கில் அரங்கேறும் பெரும்பாலான விவரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இதனில் கூறப்பட்டுள்ள சடங்கே பிற்கால தர்ம சூத்திரங்களிலும், ஸ்மிருதிக்களிலும் எவ்வித மாற்றமும் இன்றி இடம்பெற்றுள்ளன; இச்சடங்கின் சமூகக் கண்ணோட்டத்தை பரைசாற்றுவதே அவற்றின் முதன்மை நோக்காக அமைந்தது. அநேகமாக இக்காலகட்டத்தில்தான் முதல் மூன்று...
ஸம்ஹிதைகளில் உபநயனம்
கிருஹ்ய சூத்திரங்களில் குறிக்கப்படும் உபநயனத்துக்கான அம்சங்களை ரிக் வேத ஸம்ஹிதையிலேயே நம்மால் காண முடிகிறது.[1] பலி பீடமான யூப ஸ்தம்பத்தை (yūpa-stambha) இளைஞனாகப் போற்றுகிறார்கள் – “மேகலை அணிந்து அழகாய் அலங்கரிக்கப்பட்ட பாலகன் இதோ வருகிறான் (மேகலை அணிந்த பாலகனை ரசானுபாவமாக யூப ஸ்தம்பத்தோடு இங்கே ஒப்பிடுகிறார்கள்); இப்பிறப்பால் உயர்நிலை அடைகிறான்; தேவதைகளை வணங்கி வழிபடும் ரிஷிகள், பெரும் மகிழ்ச்சிகொண்டு அவனை வளரச்...