நமது பாரம்பரிய இலக்கியங்களான ஸ்ருதி (śruti), ஸ்மிருதி (smṛti) இவற்றைத் தெரிந்து கொள்வதற்குமுன்னும், ஒரு குறிப்பிட்ட நூலின் காலக்ரமம் மற்றும் வெவ்வேறு நூல்களுக்கு இடையேயான காலக்ரமங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய நவீன வரலாற்று கோட்பாடுகளை கருத்தில் கொள்வதற்கு முன்னும், இந்திய வரலாற்று பாரம்பரியத்தை பற்றின தெளிவான புரிதல் நமக்கு இங்கே அவசியமாகிறது.
புள்ளிவிவரங்களைக் காட்டிலும் விலைமதிப்பற்ற கருத்துக்களை வலியுறுத்துவதே இந்தியர்களின் வரலாற்று நோக்கமாக...
‘உபநயனம்’ என்றால் ‘நெருங்கி இட்டுச் செல்லுதல்’ அல்லது ‘அருகில் அழைத்து வருதல்’ என்று பொருள். ‘ஞானத்தை நோக்கி இட்டுச் செல்லுதல்’ அல்லது ‘கற்பதற்காக ஆசாரியரிடத்தில் அழைத்து வருதல்’ என்றும் பொருள் கொள்ளலாம்.[1] ‘உபநயனம்’ என்ற வார்த்தைக்கான மற்றொரு விளக்கம் ‘கூடுதலான கண்’ அதாவது ‘அறிவுக்கண்’. இதனை உபயனம் (upayana)[2], பிரம்மோபதேசம் (brahmopadeśa), உபானயம் (upānaya), மௌஞ்ஜீ-பந்தனம் (mauñjī-bandhana), படு-கரணம் (baṭu-karaṇa), மற்றும் விரத-பந்தம் (...
‘சமஸ்காரம்’ (‘saṃskāra’) என்கிற வார்த்தைக்கு இணையான பொருள் ஆங்கிலத்தில் ஒன்றுமில்லை; அதற்கு ‘மெருகேற்றும்,' ‘வளர்த்தல்,' ‘பூரணத்துவம்,’ ‘அலங்கரித்தல்,’ ‘நியமனம்,’ ‘கல்வி,’ ‘நேர்மறை மாற்றம்,’ ‘பூர்வகர்மவினை’ உள்ளிட்ட பல அர்த்தங்கள் உள்ளன. பொதுவாக இது ‘நன்மை செய்தல்’ அல்லது ‘தேவையற்றதை விலக்கி, இருப்பதை மெருகேற்றுவதை’ குறிக்கும்.
“இலக்கியரீதியாக பார்த்தால் ‘சமஸ்காரம்’ என்கிற வார்த்தைக்கு ‘நல்லதைச் செய்தல்’ என்று பொருள் கூறலாம். ஒரு கைதேர்ந்த...
ஒவ்வொரு சமூகமும் அவர்கள் வாழும் அந்தந்த தேசகாலங்களுக்கு தகுங்தாற்போல வாழ்வின் முக்கியமான கட்டங்களை தேர்வு செய்து கொள்கின்றன. ஒருவரது வாழ்க்கைப் பயணம் என்பது அவர் பிறப்புக்குமுன் தொடங்கி, வாழ்நாள் முழுதும் தொடர்ந்து, மரணித்த பின்பு வரையுங்கூட தொடர்கிறது என்பதே அனைவருக்கும் பொதுவான விதி.
தமக்கென சந்ததி வேண்டும் என ஒரு தம்பதி கருதுவதால், கருவாக ஒரு குழந்தை உதயமாகிறது. கருத்தரித்தபின் ஊசிநுனியைவிட பதினைந்து மடங்கு அளவு குறைவிலான, ஒரு அங்குலத்தின்...
நம் வாழ்வில் மாற்றமொன்றே மாறாதது.
உடலளவில், உணர்ச்சிப் பெருக்கத்தில், மன ரீதியில், பிறரோடு உறவைப் பேணுவதில், சமூக அந்தஸ்தில் – இன்னும் வாழ்வின் பற்பல நிலைகளிலும் நமது நிலைபாடு வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மாறிக்கொண்டே வருகிறது.
இது ஒரு முடிவற்ற, தொடர் மாற்றம் எனினும், வாழ்வின் பல ‘கட்டங்களை’ நம்மால் உணர முடிகிறது. உதாரணத்துக்கு, படிப்பை எடுத்துக் கொள்ளலாம். தினமொறு புதுப்பாடம் பயில்கிறோம். எனினும், ‘ஆரம்ப பள்ளி’, ‘நடுநிலைப் பள்ளி’, ‘உயர்நிலை...