கல்வி மற்றும் நடத்தைக்கான விதிமுறை[1]
வேதம் கற்பதன் குறிக்கோள் மந்திரங்களை மனப்பாடம் செய்வது மாத்திரம் அல்ல. பாடத்தின் பொருளையும் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும். பண்டைய அறிஞர்கள் பலர் குருட்டு மனப்பாடத்தை கண்டனம் செய்தும், பொருளுணர்ந்து (தியானித்து) பயில்வதைப் போற்றியும் உள்ளனர். இவ்வாறிருப்பினும், பல நூற்றாண்டுகளாக வேதம் பயின்றவர்கள் பொருளறியாமல் அவற்றை மனனம் மாத்திரமே செய்து வந்தனர். இது இன்றும் தொடர்கிறது.
பிரம்மசாரியின் நடத்தைக்கான கோட்பாடுகளை பல நூல்கள் விதிக்கின்றன. அவற்றுள் சில:
Pratyutthāna – ஒரு நபரை வரவேற்கும்போது எழுந்து நிற்பது
Abhivādana – பிறரை (குறிப்பாக வயதில் மூத்தவர்களை) வணங்குவது
Upasaṅgrahaṇa – குரு(அல்லது பிறர்) பாதத்தைத் தொட்டு வணங்குவது
Pratyabhivāda – எதிர் வணக்கம் செலுத்துவது
Namaskāra – 'நம:' என்று கூறி பணிவாக குனிவது
Upasaṅgrahaṇaத்தில் ஒருவன் தனது காதைத்தொட்டுக்கொண்டு, "நான் வணங்குகிறேன்!", என்று கூறி தனது கோத்திரத்தையும் பெயரையும் குறிப்பிட்டு, தலை குனிந்து குருவின் பாதத்தைத் தொட்டு வணங்குகிறான். Abhivādanaத்தில் (பிறரது) பாதத்தைத் தொடுவதில்லை; வணங்க நினைப்பவரது பாதத்தைத் தொடுவதும் தொடாததும் அவரவர் இஷ்டம். Pratyutthāna செய்த பின்பே abhivādana செய்ய வேண்டும்.
அபிவாதனத்தின்போது, சிறுவன் தனது பெயர் (ஆன்மீக சடங்குகளில் அவன் பயன்படுத்தும் பெயர்)[2], கோத்திரம் (பரம்பரை), pravaras (புகழ்பெற்ற மூதாதையர்கள் பெயர்கள்;பொதுவாக மூன்று, ஐந்து அல்லது ஏழு தலைமுறையினர்), சூத்திரம் (அவனது குடும்பத்தினர் (குறிப்பாக தகப்பனார் பக்கத்தவர்) பின்பற்றும் தர்ம சூத்திரங்கள் மற்றும் கிருஹ்ய சூத்திரங்கள், மற்றும் சாகை (அவனது தகப்பனார், பாட்டனார் போன்றோர் பயின்ற வேதத்தின் குறிப்பிட்ட கிளைகள்) போன்றவற்றைக் குறிப்பிடுகிறான். உதாரணமாக, Abhivādaye, Aṅgirasa-Bṛhaspati-Bhāradvāja trayārṣeya pravarānvita, Bhāradvājagotraḥ, Āpastambasūtraḥ, Yajuśśākhādhyāyī, Śrī Śrīnivāsarāghavaśarman nāmaham asmi bhoḥ.
Upākarma – புது வருட தொடக்கம்
‘Upākarma’ என்றால் ‘upakrama’ அல்லது ‘prārambha' அல்லது 'தொடக்கம்' என்று பொருள். பள்ளித்துவக்கம் வருடாவருடம் நடைபெறுவதைப்போல இதுவும் வருடாந்திரம் நடைபெறும். பொதுவாக, சிறிய இடைவேளைக்குப்பின் ஒவ்வொரு முறை வேத பாடங்களைத் தொடங்கும்போதும் இது நடைபெறும். பொதுவாக, பூணூலும், தண்டமும் மாற்றப்படும். வருட முடிவில் ‘utsarjana’ என்கிற சடங்கு நடைபெறும். இதன் பிறகு மீண்டும் உபாகர்மமாகும்வரை கல்வி கற்கக்கூடாது.
முடிவுரை
உபநயனச் சடங்கு ஒரு சிறுவனது வாழ்வின் புதிய அத்தியாயத்தின் துவக்கம். இதன்மூலம், மழலைப் பருவத்திலிருந்து வெளிவந்து அவன் கவனமாக கல்வி கற்று, ஒழுங்கான வாழ்க்கை வாழ்கிறான். அந்த பாலகன் ஒரு வழிப்போக்கனாக, கடினமான ஞான மார்க்கத்தை பின்பற்றத் தயாராகிறான் என்பதை இச்சடங்கு குறித்த ஒரு கருத்து சுட்டிக்காட்டியது. இறுதி இலக்கை அடைய, அவன் கல் போல உறுதியாக இருக்க வேண்டும். தனது குருவின் உள்ளத்தோடும், மனத்தோடும் ஒன்றி வாழ வேண்டும். நீண்ட, தனிமையான இப்பயணத்தில் அவனுக்குதவ தேவர்களும், இயற்கை சக்திகளும் உறுதி அளிக்கின்றன. Kṣātra மற்றும் சக்தியைக் குறிக்கும் இந்திரனும், brāhma மற்றும் தேஜஸ்ஸைக் குறிக்கும் அக்னியும் அவனுக்கு வழிகாட்டியானார்கள்.[3] இப்பாதையில் அவன் சரியாக நடைபயின்றால், அவன் வாழும் இடத்தில் அவனொரு மாமேதையாக, மேதகு உயர் குடிமகனாக விளங்கி, உலக முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கிறான்.
இக்கட்டுரை திரு ஹரி ரவிகுமாரது “Upanayana – A Gentle Introduction” என்கிற ஆங்கில கட்டுரைக்கான மொழிபெயர்ப்பு.
திரு பிரதீப் சக்ரவர்த்தி, ஷதாவதானி டாக்டர் ஆர் கணேஷ், டாக்டர் கோடி ஶ்ரீகிருஷ்ணா, திரு ஷஷி கிரன் பி என், மற்றும் திரு அர்ஜுன் பரத்வாஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
நூற்பட்டியல்
Achari, Sri Rama Ramanuja. Saṁskāras: The Hindu Sacraments. Srimatham, 2015 http://www.srimatham.com/uploads/5/5/4/9/5549439/hindu_samskaras.pdf
Devuḍu. Mahādarśana. Bangalore: Devuḍu Pratiṣṭhāna, 2009
H H Sri Rangapriya Swami’s lecture on the Gāyatrī mantra
Harshananda, Swami. Upanayana: Sandhyāvandana and Gāyatrīmantrajapa. Chennai: Sri Ramakrishna Math.
Harshananda, Swami. A Concise Encyclopaedia of Hinduism. Volume 3. R-Z. Bangalore: Ramakrishna Math, 2008
Kane, Pandurang Vaman. History of Dharmaśāstra. Vol. II, Part I. Poona: Bhandarkar Oriental Research Institute, 1941
Pandey, Rajbali. Hindu Saṁskāras: Socio-Religious Study of the Hindu Sacraments. New Delhi: Motilal Banarasidass, 1969
Ṛgvedasaṃhitā. Vol. 17. Ed. Rao, H. P. Venkata. Mysore: Sri Jayachamarajendra Vedaratnamala, 1948-62
Śatāvadhāni Dr. R Ganesh’s seven-part lecture series in Kannada titled Ṣoḍaśa-saṃskāragaḻu at Gokhale Institute of Public Affairs (GIPA) in December 2005
The Sixteen Samskaras http://cincinnatitemple.com/articles/SixteenSamskaras.pdf
அடிக்குறிப்புகள்
[1] HDS, pp. 334-35
[2] நாமகரண சடங்கின்போது பொதுவாக ஒரு குழந்தைக்கு மூன்று பெயர்கள் வழங்கப்படுகின்றது-ஒன்று உலகத்தார் வழங்குவதற்கானது, இரண்டாவது நண்பர்களும் சுற்றத்தாரும் வழங்குவதற்கானது, மூன்றாவது ஆன்மீக சடங்குகளுக்கானது
[3] இந்திரன்-வலிமை, வீரம், உறுதி ஆகியவற்றை குறிப்பவனும்கூட; ஆதித்யன் (வானில்), அக்னி (மண்ணில்) – ஒளி, வெப்பம் மற்றும் திறமையைக் குறிக்கின்றனர்; அண்ட ஒழுங்கைக் குறிப்பவன் வருணன், இவ்வண்டத்திற்கு நாம் செலுத்தவேண்டிய கடன்களை நினைவுபடுத்துபவன் இவன்