தண்டம்-கோல்[1]
ஆசாரியர் மாணவனுக்கு தண்டத்தை(கோலை) வழங்கும்போது, அவன், "எனது தண்டம் கீழே விழுந்துவிட்டது, அதனை நான் எனக்கு நீண்ட ஆயுள் கிட்ட வேண்டியும், பிரம்மசரிய மார்க்கத்தில் என்னை வழிநடத்தவும், எனது மாணவ-வாழ்க்கையின் துவக்கத்தைக் குறிக்கவும் மீண்டும் என் கையில் எடுத்திருக்கிறேன்", என்று கூறி தண்டத்தைப் பெற்றுக் கொள்கிறான்.[2] உடல், மனம், வாக்கு இவைகளின் கட்டுப்பாட்டை 'தண்டம்' உணர்த்துகிறது.
மாணவப் பருவமே ஒரு பெரும் யக்ஞம் என கருதப்பட்டதால், யக்ஞத்தின் துவக்கத்தில் கோலேந்தும்போது கூறப்படும் வரிகளே தண்டத்தை அவன் ஏந்தும்போதும் கூறப்படுகிறது.[3]
இப்போது மாணவன் தனிமையான, நீண்ட ஞான மார்க்கத்தில் பயணிக்கவிருக்கிறான்,[4] ஆதலால் தண்டம் ஒரு வழிப்போக்கனுக்கான சின்னம்; அதனை வாங்கிக்கொள்ளும்போது நல்லபடியாக தான் அடைய நினைத்த இலக்கை இப்பயணத்தின் இறுதியில் தான் அடைந்துவிட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறான்.
கோல் ஏந்தி அனைவரையும் காத்து ரக்ஷிக்கும் பொறுப்பு ஒரு பாதுகாவலனுக்கானது. அதேபோல தண்டம் ஏந்தி வேதங்களைக் காத்து ரக்ஷிக்கும் பொறுப்பு ஒரு மாணவனுக்கானது.[5]
எந்த மரக்கட்டைகளை தண்டம் தயாரிக்க பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன; அவரவர் வர்ணத்துக்கு தகுந்தாற்போல், வெவ்வேறு அளவிலான வெவ்வேறு மரங்கள் பயன்படுகின்றன. தண்டத்தின் நேர்த்தியும் கருத்தில் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உடையாத, கீரல் ஏதும் இல்லாத, பட்டையுடனிருக்கும் தண்டத்தையே பயன்படுத்தினர்.[6] கட்டாயம் அது நேரான, கீரலில்லாத, நேர்த்தியான, கையாளுவதற்கு எளிதான, நெருப்பால் எரிக்கப்படாத தண்டமாக இருத்தல் வேண்டும்.[7]
நடைமுறையிலும் தண்டம் பயன்பட்டது. ஆதரவுக்கு, குருவின் கால்நடைகளை மேய்ப்பதற்கு, இரவில் பயணிக்கையில் தற்காப்பிற்கு, நதி குளம் முதலான நீர் நிலைகளில் நுழைகையில் வழிகாட்டுவதற்கு என்று பல்வேறு விதங்களிலும் தண்டம் பயன்பட்டது. அவனுக்கு தன்னம்பக்கையை ஊட்டுவதற்கும் இது பயன்படலாம்.[8]
Añjalipūraṇa மற்றும் சூரியனை நோக்குதல்[9]
ஆசாரியர் ஒரு மாணவனை சேர்த்துக்கொள்வதற்கு முன்னர் சில சம்பிரதாயங்கள் அரங்கேறின. கூப்பிய இரு கரங்களால் (கைகூப்பி நிற்கும்) மாணவனின் கரங்களில் நீரூற்றி,"நீர் தேவனே!", என்கிறார். சாவித்திரி மந்திரோபதேசம் பெற சுத்தபத்தமாய் இருக்க வேண்டும் என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது.[10] பின் மாணவனை சூரியனைப் பார்க்கச்செய்து தான் ஒரு மந்திரத்தை ஓதுகிறார்.[11] மாணவன் ஒழுக்கசீலனாக வாழ வேண்டும், கதிரவன் என்பது ருதத்தின் (பிரபஞ்சத்தை ஒழுங்காக வழிநடத்தும் சக்தி) அடையாளம். அனைத்திற்கும் சாட்சியாகவும், கால ஓட்டத்தின் தலைவனாகவும் விளங்கும் கதிரவனை நேர்த்தியாக வழிபட வேண்டும்.[12] மாணவனுக்கு ஒழுக்கத்தை போதிப்பதே சூரிய நமஸ்காரம்.
மனதைத் தொடுதல்[13]
பிரம்மசாரி மாணவனது வலது தோள்பட்டை வழியாக ஆசிரியர் அவனது மார்பில் கைவைத்து,"நான் உனது இதயத்தை என் இதயத்தில் வைக்கிறேன்...", என்கிறார்.[14] சுயநலமற்ற, புனிதமான, கண்டிப்பற்ற, நட்பு பாராட்டுகிற ஆசிரிய-மாணவ பந்தத்தை இது வலியுறுத்துகிறது. ஆசிரியருக்கும் மாணவனுக்குமான உறவில் நல்லிணக்கம் இல்லாவிடில் எவ்வாறு கல்வி கற்க முடியும்? மாணவனுக்கு குரு பக்தியும், ஆசிரியருக்கு அனுதாப மனோபாவமும், இரு தரப்பினருக்கும் சினேக பாவமும் மாணவனின் கல்வித் தேர்ச்சிக்கு பேருதவி புரிகின்றன. மேலும், நமது மூதாதையர்கள் பெரிதும் போற்றிவந்த கல்விச் செல்வத்தை வளர்க்க இதுவே சிறந்த வழி.
Aśmārohaṇa – கல் ஏற்றுதல்[15]
ஹோமம் முடிந்ததும் தனது வலது பாதத்தால் ஒரு கல்லை அக்னிக்கு வடக்கே நகர்த்த வேண்டும்.[16] கல்லை நகர்த்தும்போது, "இக்கல்லை நகர்த்து! கல் போல திடமாய் இரு! பகைவர்களை நசுக்கி, எதிரிகளை ஓடச்செய்!", என்கிறான்.[17] ஒரு மாணவன் படிப்பில் பிடிப்புடன் இருக்கும்படி கட்டளையிடப்படுகிறான்.[18] கல் என்பது வலிமையின் சின்னம்.[19] ஒரு மாணவன் உடல் வலிமையோடும், மன உறுதியோடும், தீர்க்கமான ஒழுக்கத்தோடும் விளங்க வேண்டும் என்பதே அஸ்மாரோஹணத்தின் நோக்கம்.
மாணவனை குரு ஏற்றுக் கொள்கிறார்[20]
ஹோமம் நிறைவடைந்ததும் ஒரு மந்திரத்தை உச்சரித்து கடைந்தெடுக்கப்பட்ட கலவையை மூன்று முறை ருசிபார்க்க வேண்டும்[21] என்று சில விதிகள்[22] கூறுகின்றன.
பிரம்மசாரியின் வலது கரம்பற்றி குரு அவனது பெயர் என்ன என்று கேட்கிறார்.[23]
அதற்கு அம்மாணவன், "குருவே, நான் ராகவன்!", என பதிலளிக்கிறான்.
நீ யாருடைய மாணவன் என்று குரு வினவுகிறார்.
"நான் தங்களது சீடன்!", என மாணவன் மறுமொழி கூறுகிறான்.
குரு அவனைத் திருத்தி, "நீ இந்திரனது சீடன். அக்னி உனது ஆசான். மேலும் ராகவனே, நான் உனது ஆசான்!", என்கிறார். [24]
இவ்விதம் கூறி மாணவனை குரு ஏற்றுக் கொள்கிறார். தற்காலத்து பள்ளிக்கூட நேர்காணலுக்கு ஒப்பாக இதனை வைத்துக் கொள்ளலாம்.
தான் ஒருவனே அந்த பிரம்மசாரியுடைய கல்விக்கும், பாதுகாப்புக்கும் பொறுப்பு என்கிற தவறான எண்ணம் குருவுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. அதனால் அவர், "நான் பிரஜாபதியிடத்தில் உன்னை ஒப்புவிக்கிறேன்! சாவித்திரியிடத்தில் உன்னை ஒப்புவிக்கிறேன்! வானுக்கும் மண்ணுக்கும் உன்னை ஒப்புவிக்கிறேன்! எல்லா ஜீவராசிகளிடத்தேயும் நான் உன்னை ஒப்புவிக்கிறேன்! இப்படிச் செய்வதனால் தீங்கிலிருந்து நான் விடுபடுவேன்!", என்ற மந்திரத்தை உச்சரிக்கிறார்.[25] இதற்கு பரிதானம் என்று பெயர்.
தொடரும்...
இக்கட்டுரை திரு ஹரி ரவிகுமாரது “Upanayana – A Gentle Introduction” என்கிற ஆங்கில கட்டுரைக்கான மொழிபெயர்ப்பு.
திரு பிரதீப் சக்ரவர்த்தி, ஷதாவதானி டாக்டர் ஆர் கணேஷ், டாக்டர் கோடி ஶ்ரீகிருஷ்ணா, திரு ஷஷி கிரன் பி என், மற்றும் திரு அர்ஜுன் பரத்வாஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அடிக்குறிப்புகள்
[1]HDS, pp. 279-80 மற்றும் HS, pp. 134-35
[2] Taṃ pratigṛhṇāti yo me daṇḍaḥ parāpatadvaihāyaso’dhibhūmyāṃ tamahaṃ punarādada āyuṣe brahmaṇe brahmavarcasāyeti. – Pāraskara-gṛhya-sūtra 2.2.12
[3] Dīrghasatraṃ vā eṣa upaiti brahmacaryamupaiti – என ஹரிஹரர் Pāraskara-gṛhya-sūtra 2.2.13வில் எடுத்துக்காட்டுகிறார்
[4] Mānava-gṛhya-sūtra 1.22.11
[5] Varāha-gṛhya-sūtra, அத்தியாயம் 6
[6] Apīḍitā yūpavakrāḥ saśalkāḥ. – Gautama-dharma-sūtra 1.1.24
[7] Ṛjavaste tu sarve syuravraṇāḥ saumyadarśanāḥ. Anudvegakarā nṝṇāṃ satvaco’nagnidūṣitāḥ. – Manu-smṛti 2.47
[8] Daṇḍājinopavītāni mekhalāṃ caiva dhārayet. – Yājñavalkya-smṛti 1.29
“Tatra daṇḍasya kāryanavalambanaṃ gavādinivāraṇaṃ tamovagāhanamapsu praveśanamityādi” என்பது இவ்வரிக்கான Aparārkaவின் விளக்கம்
[9] HS, pp. 135-36
[10] Śucitvasiddhaye tasya sāvitrīgrahaṇo guruḥ. Abhimantrya yathāvāri siñcatyeva tadañjalau. – Āśvalāyana quoted in Vīra-mitrodaya Saṃskāraprakāśa, Vol. 1, பக்கம் 426
[11] Athainaṃ sūryamudīkṣayati taccakṣuriti. – Pāraskara-gṛhya-sūtra 2.2.15
[12] Karmasākṣiṇamādityaṃ tarpayettaṃ yathoktavat. Sarvavratānāṃ bhagavān sūryo’dhipatirīśvaraḥ. – Āśvalāyana quoted in Vīra-mitrodaya Saṃskāraprakāśa, Vol. 1, பக்கம் 427
[13] HS, பக்கம் 136
[14] Athāsya dakṣiṇāṃ samadhi hṛdayamālabhate. Mama vrate te hṛdayaṃ dadhāmi. Mama cittamanucittaṃ te astu mama vācamekamanā juṣasva bṛhaspatiṣṭvā niyunaktu mahyamiti. – Pāraskara-gṛhya-sūtra 2.2.16
[15] HDS, பக்கம் 285 and HS, pp. 136-37
[16] Āpastamba-gṛhya-sūtra 10.9, Mānava-gṛhya-sūtra 1.23.12, Baudhāyana-gṛhya-sūtra 2.5.10, Khādira-gṛhya-sūtra 2.4, மற்றும் Bhāradvāja-gṛhya-sūtra 1.8 ஆகியவற்றைக் காண்க
[17] Abhidakṣiṇamānīyāgneḥ paścāt ehyaśmānamātiṣṭhāśmeva tvaṃ sthiro bhava... – Mānava-gṛhya-sūtra 1.22.12
[18] Mānava-gṛhya-sūtra 1.22.12-13
[19] Bhāradvāja-gṛhya-sūtra 1.8வைக் காண்க
[20] HDS, பக்கம் 285 மற்றும் HS, பக்கம் 137
[21] Dadhikrāvṇo akāriṣam – Ṛgveda-saṃhitā 4.39.6 (மற்றும் Taittirīya-saṃhitā 1.5.4.11)
[22] Mānava-gṛhya-sūtra 1.22.3 மற்றும் Kāṭhaka-gṛhya-sūtra 41.10
[23] Pāraskara-gṛhya-sūtra 2.2, Bhāradvāja-gṛhya-sūtra 1.7, Āpastamba-gṛhya-sūtra 11.1-4, Āpastamba-mantra-pāṭha 2.3.27-30, Baudhāyana-gṛhya-sūtra 2.5.25 (Śāṭyāyanakaவை மேற்கோள் காட்டி), Mānava-gṛhya-sūtra 1.22.4-5, மற்றும் Khādira-gṛhya-sūtra 2.4.12 ஆகியவற்றைக் காண்க
[24]முன்பே கூறியதைப்போல இந்திரன் முதலாம் குரு, அக்னி இரண்டாம் குரு. இவர்களுக்குப் பின்பே தாம் வருவதாக குரு கூறுவதற்கான காரணம், தேவர்களின் பங்களிப்பை வலியுறுத்தவும், தன்னடக்கம் பேணவும் இருக்கலாம்
[25] Asāvahaṃ bho. Iti pratyāha. Āthainamāha kasya brahmacāryasīti. Bhavata ityucyamāna indrasya. Brahmacāryasyagnirācāryastavāhamācāryastavāsāviti. Athainaṃ bhūtebhyaḥ paridadāti prajāpataye tvā paridadāmi devāya tvā savitre paridadāmyadbhyastvauṣadhībhyaḥ paridadāmi dyāvāpṛthivībhyāṃ tvā paridadāmi viśvebhyastvā devebhyaḥ paridadāmi sarvebhyastvā bhūtebhyaḥ paridadāmyariṣṭyā iti. – Pāraskara-gṛhya-sūtra 2.2.18-23
ஒரு வகையில், மாணவனை காத்து ரக்ஷிக்க Prajāpati (படைப்பவர்), Savitṛ (சூரியன்), Dyāvāpṛthivī (சொர்க்கமும் பூமியும்), போன்ற பல்வகை தேவதைகளிடத்திலும் அவனது குரு வேண்டிக்கொள்கிறார்