சந்தியா[1] என்றால் அந்தி நேரம் என்றாலும் காலை, மாலை என இரு வேளைகளிலும் சந்தியா வந்தனம் செய்யப் படுகின்றது.[2] சூரியனைப் போற்றும் இச்சடங்கை நாம் ‘sandhyopāsana’ என்றோ ‘sandhyāvandana’ என்றோ அல்லது வெறுமே ‘sandhyā என்றோ அழைக்கிறோம்.[3] 'சந்தியா' என்பது 'இரவு பகலை சந்திக்கும் வேளையையோ (அதிகாலை)' அல்லது 'பகல் இரவை சந்திக்கும் வேளையையோ (அந்திமாலையையோ)' குறிக்கும் சொல். முதலாவது ‘prātaḥ-sandhyā’, பின்னது ‘sāyaṃ-sandhyā.’
சந்தியா வந்தனத்தை ஒரு நாளைக்கு இரு முறை செய்வதே வழக்கம்,[4] எனினும் அதிகாலை, பிற்பகல் (madhyāhna-sandhyā)[5], அந்தி மாலை என மூன்று வேளை செய்வதற்கும் சில நூல்கள் பணிக்கின்றன. ஆத்ம ஞானம் பெற்ற த்விஜன் Gāyatrī (prātaḥ-sandhyā), Sāvitrī (madhyāhna-sandhyā), மற்றும் Sarasvatī (sāyaṃ-sandhyā)[6] ஆகிய மூன்று சந்தயா வந்தனங்களையும்[7] செய்ய வேண்டும்.
Prātaḥ-sandhyāவை சூரியன் உதிப்பதற்குமுன் தொடங்கி சூரிய வட்டை அடிவானத்தில் காண்பதற்கு முன் செய்து முடிக்க வேண்டும். Sāyaṃ-sandhyāவை சூரியாஸ்தமனத்துக்கு சற்றுமுன் தொடங்கி நட்சத்திரங்கள் தோன்றும் சமயத்தில் முடிக்க வேண்டும். சந்தியா வந்தனத்துக்கான கால அவகாசம் ஒரு முகூர்த்தம், அதாவது இரண்டு ghaṭikās-இது நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு ஈடானது.
காயத்ரி மந்திர ஜபமும், புனித மந்திரங்களின் ஜபமுமே சந்தியா வந்தனத்தில் பிரதானமாக செய்யப்படுகிறது. Mārjana போன்ற பிற அம்சங்கள் இரண்டாம் பட்சமே.
உபநயனத்தன்று prātaḥ-sandhyā இல்லை. காயத்ரி மந்திரம் ஓதப்படாத வரையில் சந்தியா வந்தனமும் இல்லை என்று Jaiminī கூறுகிறார். உபநயனத்தன்று நண்பலிலேயே ஒரு மாணவன் முதல் முறையாக சந்தியா வந்தனம் செய்கிறான். அச்சமயத்தில் காயத்ரி மந்திரம் தவிர பிற வேத பாடங்களை அவன் கல்லாததால், சந்தியா வந்தனத்தின்போது காயத்ரி மந்திரத்தை மாத்திரமே அப்போது ஓதுகிறான்.
சூரியன் பயணிக்கும் பாதையை குறிக்கிற ஆதித்ய தேவனை பிரம்மசாரி தியானிப்பதே சந்தியா வந்தனத்தின் நோக்கம். தன்னுடைய தேஜஸானது சூரியனுடைய தேஜஸுக்கு ஒப்பானது என்பதை எண்ணி தியானிக்க வேண்டும்.
கிராமத்துக்கு வெளியிலோ[8], காடுபோன்ற அமைதியான இடம்[9], நதி, அல்லது புனித ஸ்தலம் போன்ற இடங்களோ சந்தியா வந்தனம் செய்யத் தகுதியான இடங்களாகும்.[10]
Prātaḥ-sandhyāவை நின்றுகொண்டு செய்ய வேண்டும்; sāyaṃ-sandhyāவை அமர்ந்திருந்து செய்ய வேண்டும்.[11] கிழக்கு நோக்கி Prātaḥ-sandhyāவை செய்ய வேண்டும்; வடமேற்கு நோக்கி sāyaṃ-sandhyāவை செய்ய வேண்டும்.[12] குளித்தபின், ஒரு தூய இடத்தில் குசப்புல்லை பரப்பி, பூணூலை எப்போதும்போல் தரித்திருந்து, மௌனமாக (சந்தியா வந்தனத்தின்போது பேசக் கூடாது) சந்தியா வந்தனத்தை அவன் செய்ய வேண்டும்.
Sandhyopāsanaத்தின்போது பிரதானமாக செய்யப்படுபவை:
1. Ācamana (நீர் அருந்துதல்)
2. Prāṇāyāma (மூச்சுப் பயிற்சி)
3. Saṅkalpa (சடங்கில் ஈடுபடுதல்)
4. Mārjana (குறிப்பிட்ட சில மந்திரங்களை உச்சரிக்கும்போது மூன்று முறை தன் மீது நீரை தளித்துக் [பிரோக்ஷணம்] கொள்ளுதல்)
5. Aghamarṣaṇa (பாவங்களை விரட்டுதல்)
6. Arghya-pradāna (நீரை சூரியனுக்குப் படைத்தல்)
7. Gāyatrī mantra japa (அமைதியாக காயத்ரி மந்திரத்தை உச்சரித்தல்)
8. Upasthāna (மித்ரனைக் குறித்து காலையிலும், வருணனைக் குறித்து மாலையிலும் மந்திரங்களை உச்சரித்தல்)
Sandhyopāsanaத்தில் காயத்ரி மந்திர ஜபத்தை மாத்திரமே சில சாத்திர நூல்கள் சேர்த்துக் கொள்கின்றன.[13] இன்னும் சில நூல்கள் அர்க்கியம் மற்றும் காயத்ரி மந்திர ஜபத்தை ஏற்றுக் கொள்கின்றன.[14] Ācamana, mārjana, upasthāna, முதலான சந்தியோபாசனத்திற்கான அனைத்து கட்டங்களைப் பற்றின விவரங்களை விஸ்தீரணமாக gṛhya-sūtraங்களில் காணலாம்.[15]
ஒவ்வொரு சடங்கின்போதும் தன்னைத்தானே சுத்தி செய்து கொள்வது Ācamana. ஒரு தூய இடத்தில் அமர்ந்து(நிற்கவோ கூன்போடவோ கூடாது), வடக்கு அல்லது கிழக்கு நோக்கி, கொதிக்காத நுரையற்ற நீரை மூன்று முறை ஆசமனத்தின்போது ஒருவர் பருக வேண்டும்.
உள்மூச்சையும் வெளிமூச்சையும் சீராக்குவதே Prāṇāyāma எனும் மூச்சுப் பயிற்சி.[16] இதன் மூன்று கட்டங்கள்-பூரகம்(மூச்சிழுத்தல்), கும்பகம்(தக்க வைத்தல்), மற்றும் ரேசகம்(மூச்செறிதல்). இவ்வாறு ஒவ்வொன்றும் பதினைந்து மாத்திரைகள் நீடிக்கும்வரை மூன்று பிராணாயாமங்களை செய்ய வேண்டும்.[17] பிராணாயாமத்தின்போது காயத்ரியின் சிரஸ்ஸையும், ஓம் என்று தொடங்குகிற அதன் மூன்று வியாஹ்ருதங்களையும்(உச்சரிப்புக்கள்), காயத்ரி மந்திரத்தையும் மனதில் ஒத்திகை பார்க்க வேண்டும்.[18]
சடங்கில் ஈடுபட சங்கல்பம் செய்து கொள்கையில் பொதுவாக சப்பணமிட்டு உட்கார வேண்டும். வலது உள்ளங்கையை இடது உள்ளங்கைமீது வைத்து, இடக்கையை பற்றி, இரு கைகளையும் வலது முட்டி மீது வைத்துக்கொண்டு இதனை செய்ய வேண்டும்.
Mārjana என்றால் 'துலக்குதல்'. இதனால் ஒருவன் தேகசுத்தி பெற்று சடங்கை மேற்கொள்ள தகுதி பெறுகிறான். செம்புச் சொம்பிலோ, udumbara மரத்திலான பாத்திரத்திலோ அல்லது மண்பானையிலோ உள்ள நீரில் குசப்புல்லை நனைத்து Mārjanaவை செய்ய வேண்டும். இச்சடங்கை செய்கையில் 'ஓம்', 'வியாஹ்ருதங்கள்', 'காயத்ரி மந்திரம்', 'குறிப்பட்ட சில வரிகளை' தொடர்ந்து மாறி மாறி உச்சரிக்க வேண்டும்.[19] Mārjanaவின்போது பற்பல வேத மந்திரங்களை உச்சரிக்கலாம் என Baudhāyana பரிந்துரைக்கிறார்.[20]
Aghamarṣaṇaவில் மாட்டின் காதுபோல வலக்கையை மடக்கி அதில் நீரூற்றி, மூக்கின் அருகில் வைத்து, நீரின்மேல் மூச்செரிந்து (தாம் செய்த பாவங்களிலிருந்து விடுபட), குறிப்பிட்ட வரிகளை உச்சரித்து[21], உடலுக்கு இடப்பக்கமாக தரையில் அந்நீரை ஊற்ற வேண்டும்.
Arghya-pradānaத்தில் கூப்பிய கரங்களில் நீர் எடுத்து, காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, காலையில் நின்றும் மாலையில் அமர்ந்தும் கதிரவனை பார்த்து, மூன்று முறை தெளிக்க வேண்டும். நீரில்லையெனில் தூசை ஒருவர் பயன்படுத்தலாம். ஆதித்யனே பிரம்மம் ஆதலால், உதித்து அஸ்தமனமாகும் சூரியனை (இடமிருந்து வலமாக சென்று) தியானிக்கும் ஒரு பிராம்மணன் பரமானந்த நிலையை அடைகிறான்.[22]
காயத்ரி மந்திர ஜபம் என்பது காயத்ரியை தொடர்ந்து உச்சரிப்பது.[23]
Upasthānaத்தை பொதுவாக நின்றுகொண்டு செய்வதே வழக்கம். இதில் சூரிய தேவனான மித்ரனைக் காலையிலும், ருத தேவனான வருணனை மாலையிலும் போற்றி மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன.[24]
தொடரும்...
இக்கட்டுரை திரு ஹரி ரவிகுமாரது “Upanayana – A Gentle Introduction” என்கிற ஆங்கில கட்டுரைக்கான மொழிபெயர்ப்பு.
திரு பிரதீப் சக்ரவர்த்தி, ஷதாவதானி டாக்டர் ஆர் கணேஷ், டாக்டர் கோடி ஶ்ரீகிருஷ்ணா, திரு ஷஷி கிரன் பி என், மற்றும் திரு அர்ஜுன் பரத்வாஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அடிக்குறிப்புகள்
[1] HDS, pp.312-18
[2] சந்தியோபாசனத்துக்கான பழைய குறிப்பு Taittirīya-āraṇyaka 2.2இல் வருகிறது – “Tāni ha vā etāni rakṣāṃsi gāyatriyābhimantrītenāmbhasā śāmyanti. Tadu ha vā ete brahmavādinaḥ pūrvābhimukhāḥ sandhyāyāṃ gāyatriyābhimantritā apa ūrdhvaṃ vikṣipanti tā etā āpo vajrībhūtvā tāni rakṣāṃsi mandehāruṇe dvīpe prakṣipanti.”
[3] Yājñavalkya-smṛti 1.25க்கான Viśvarūpaரது விளக்கம் – “Sandhyeti copasthānakarmaṇo nāmadheyaṃ kālasya cānyataḥ prāptatvāt,” மேலும் அதே வரிக்கான விளக்கமாக Mitākṣara கூறுவது – “Ahorātrayoḥ sandhau yā kriyā vidhīyate sā sandhyā.” Manu-smṛti 2.101 பற்றின Medhātithiயின் விளக்கம்: “Na sarve tamaḥ kṣīṇaṃ nāpi paripūrṇaḥ prakāśa eṣā sandhyā,” மற்றும் Manu-smṛti 4.94 பற்றின விளக்கம் – “Sahacarite japādividhau sandhyāśabdo vartate.”
[4] Āśvalāyana-gṛhya-sūtra 3.7, Āpastamba-dharma-sūtra 1.11.30.8, Gautama-dharma-sūtra 2.17, Manu-smṛti 2.101, Yājñavalkya-smṛti 1.24-25 &c.
[5] நாளடைவில் மதிய வேளைக்கான சந்தியாவந்தனமும் மற்றவைப்போல பிரதானமாகிற்று; நடைமுறையில் madhyāhna-sandhyāவை காலை நேர prātaḥ-sandhyāவுடனே மக்கள் செய்கின்றனர். மதிய சந்தியா இணைப்புக்கான குறியீடு-சூரியன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்வதற்கு இடையே அத்தருணம் அமைவதால், ஏறுமுகத்திலிருந்து இறங்குமுகத்துக்கான தருணமாக அது விளங்குகிறது. madhyāhna-sandhyāவில் முக்கியமான கட்டம் sūryāvalokana(சூரியனைப் பார்ப்பது)
[6] Pūrvā sandhyā tu gāyatrī sāvitrī madhyamā smṛtā. Yā bhavetpaścimā sandhyā sā vijñeyā sarasvatī. – Yoga-yājñavalkya கூறியதை Aparārka, பக்கம் 49 மேற்கோள் காட்டுகிறது
[7] Sandhyātrayaṃ tu kartavyaṃ dvijenātmavidā sadā. Ubhe sandhye ca kartavye brahmaṇaiśca gṛheṇvapi. – Atri, Aparārka, பக்கம் 49இல் சுட்டிக்காட்டுகிறார்
madhyāhna-sandhyāவை வீட்டில் செய்யக் கூடாது என Aparārka கூறுகிறது
[8] Āpastamba-dharma-sūtra 1.11.30.8, Gautama-dharma-sūtra 2.16, மற்றும் Mānava-gṛhya-sūtra 1.2.2
[9] Śāṅkhāyana-gṛhya-sūtra 2.9.1
[10] Baudhāyana-gṛhya-sūtra 2.4.1
[11] Āśvalāyana-gṛhya-sūtra 3.7.6; Śāṅkhāyana-gṛhya-sūtra 2.9.1,3; மற்றும் Manu-smṛti 2.102
[12] Āśvalāyana-gṛhya-sūtra 3.7.4 மற்றும் Śāṅkhāyana-gṛhya-sūtra 2.9.1
[13] Āśvalāyana-gṛhya-sūtra 3.7.3-6, Śāṅkhāyana-gṛhya-sūtra 2.9.1-3 &c.
[14] Mānava-gṛhya-sūtra 1.2.1-5
[15] Vāruṇībhyāṃ rātrimupatiṣṭhate. Imaṃ me varuṇa tattvāyāmīti dvābhyām. Evameva prātaḥ prāṅmukhastiṣṭhan. Maitrībhyāmaharupatiṣṭhate mitrasya carṣaṇīdhṛto mitrojanānyātayatīti dvābhyām. – Baudhāyana-dharma-sūtra 2.4.11-14. இவ்வரிகளுக்கான மூலங்கள் ஆவன: Imaṃ me varuṇa (Ṛgveda-saṃhitā 1.25.19), Tattvā yāmi (Ṛgveda-saṃhitā 1.24.11), Mitrasya carṣaṇīdhṛto (Ṛgveda-saṃhitā 3.59.6), மற்றும் Mitrojanān (Ṛgveda-saṃhitā 3.59.1). Gobhila-smṛti 2.11-12 – ‘Udu tyam’ (Ṛgveda-saṃhitā 1.50.1 மற்றும் பிற வேதங்களிலும்) மற்றும் ‘Citraṃ devānām’ (Ṛgveda-saṃhitā 1.115.1 மற்றும் பிற வேதங்களிலும்) ஆகிற இரு வரிகளை இரு சந்தியாவுக்கும் உபஸ்தானமாக வழிமொழிகிறது. தற்போது இதன் பயன்பாடு மாறுபடுகிறது, காலையில் Ṛgveda-saṃhitā 3.59 முழுவதையும், மாலையில் Ṛgveda-saṃhitā 1.25.1-10 (வருணனுக்கானது) ஆகியவற்றையும் ஓதுகிறார்கள். ஒருவரது வேத சாகையில் இடம்பெறும் மந்திரங்களையே சூரியனை வழிபடும்போது ஓத வேண்டும் என்று Smṛti-candrikā (I, p. 139) கூறுகிறது
[16] Tasminsati śvāsapraśvāsayorgativicchedaḥ prāṇāyāmaḥ. – Yoga-sūtra 2.49
[17] Gautama-dharma-sūtra 1.50
[18] Baudhāyana-dharma-sūtra 4.1.30 (Vasiṣṭha-dharma-sūtra 25.13இல் உள்ளதைப்போல) மற்றும் Yājñavalkya-smṛti 1.23
[19] Āpo hi ṣṭhā mayobhuvastā na ūrje dadhātana. Maheraṇāya cakṣase. Yo vaḥ śivatamo rasastasya bhajayateha naḥ. Uśatīrivamātaraḥ. Tasmā araṃ gamāma vo yasya kṣayāya jinvatha. Āpojanayathā ca naḥ. – Ṛgveda-saṃhitā 10.9.1-3
[20] Baudhāyana-dharma-sūtra 2.4.2
[21] Ṛtaṃ ca satyaṃ cābhīddhāt tapaso adhyajāyata. Tatorātryajāyata tataḥ samudro arṇavaḥ. Samudrādarṇavādadhi saṃvatsaro ajāyata. Ahorātrāṇividadhad viśvasya miṣato vaśī. Sūryācandramasau dhātā yathāpūrvamakalpayat. Divaṃ capṛthivīṃ cāntarikṣamatho svaḥ. – Ṛgveda-saṃhitā 10.190.1-3
[22] Udyantamastaṃ yantamādityamabhidhyāyan kurvan brāhmaṇo vidvān sakalaṃ bhadramaśnute’sāvāddityo brahmeti. – Taittirīya-āraṇyaka 2.2
[23] பொதுவாக 108 முறை ஓதப்படுகிறது; சிலர் 1008 முறைகூட ஓதுகிறார்கள். பத்து முறையாவது இதனைஓத வேண்டும். இந்தோனேஷியாவிலுள்ள பாலித்தீவில், காயத்ரி மந்திரத்தை பொது ஒலிபெருக்கிகளில் ஒரு நாளைக்கு மூன்று தடவை ஒலிக்கச் செய்கிறார்கள்(சில மதத்தவர் வழிபாட்டுக்காக கூப்பிடுவதைப்போல)
[24] பௌதாயனரை பொறுத்தவரையில் சூரிய வழிபாடு ‘Udvayam’ (Ṛgveda-saṃhitā 1.50.10), ‘Udu tyam’ (Ṛgveda-saṃhitā 1.50.1), ‘Citram’ (Ṛgveda-saṃhitā 1.115.1), ‘Tac-cakṣur’ (Ṛgveda-saṃhitā 7.66.16), ‘Ya udagāt’ (Taittirīya-āraṇyaka 4.42.5) ஆகிய வரிகளைக்கொண்டு செய்யப்படுகிறது