சந்தியாவந்தனம் – சூரியனை அனுதினமும் வணங்குதல்
சந்தியா[1] என்றால் அந்தி நேரம் என்றாலும் காலை, மாலை என இரு வேளைகளிலும் சந்தியா வந்தனம் செய்யப் படுகின்றது.[2] சூரியனைப் போற்றும் இச்சடங்கை நாம் ‘sandhyopāsana’ என்றோ ‘sandhyāvandana’ என்றோ அல்லது வெறுமே ‘sandhyā என்றோ அழைக்கிறோம்.[3] 'சந்தியா' என்பது 'இரவு பகலை சந்திக்கும் வேளையையோ (அதிகாலை)' அல்லது 'பகல் இரவை சந்திக்கும் வேளையையோ (அந்திமாலையையோ)' குறிக்கும் சொல்.