சமஸ்கிருதம் கற்றலும் நம் கலாச்சாரத்தின் மதிப்பும் (பகுதி 3)
பூர்வ பாகத்தில் ஒரு மனிதன் அடைய வேண்டிய உயர் பதவி சொர்க்கம் என்றும், அது வாழ்க்கை முடிந்தபின்பே சென்றடைய முடியும் என்றும் கூறுவதாக இந்த உபநிஷதம்[1] உரைக்கிறது. சொர்க்கம் சென்றவர்கள் துக்கமே இல்லாத நித்தியானந்த நிலையை அடைவார்கள் என்றும் கூறுகிறது. உத்தர பாகத்திலும் இதே கருத்து தெரிவிக்கப்படுவதாக போதிக்கும் அதே வேளையில், எல்லையற்ற ஆனந்தத்தை எங்கோ சொர்க்கபுரியில் சென்றடையாமல், நாம் பூலோகத்தில் வாழும்போதே அடைய முடியும் என்கிற உயர்ந்த கருத்தை இந்த உபநிஷதம் முன்வைக்கிறது.