சிவன். ராமன். கிருஷ்ணன்.
இந்திய பாரம்பரியத்தின் முப்பெரும் கதாநாயகர்கள்.
உயர் இந்தியாவில் தலைமுறைகள் பல கடந்தும் கடவுளர்களாக போற்றப்பட்டு வழிகாட்டிகளாக விளங்குபவர்கள்.
மனித ஒற்றுமை நூற்றாண்டுகால பரிணாம வளர்ச்சியின் பரிமாணம்.
தனிநபர்களாகவும், குடும்ப உறுப்பினர்களாகவும், சமுதாய பிரஜைகளாகவும் நாம் அனைவரும் பரிமளிக்கிறோம்.
சிவன் தனிமனித அடையாளமாக அமைகிறான்.
ராமன் குடும்ப வாழ்க்கைக்கு வழிவகுக்கிறான்.
கிருஷ்ணன் சமுதாயப் பங்காற்றுவதை போதிக்கிறான்.
இக்கதாநாயகர்களை மையப்படுத்தி
நல்வாக்கு, நற்பண்பு, நல்வாழ்க்கை குறித்து ஷதாவதானி Dr. R. கணேஷ் முன்வைக்கும் ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்