சிவ-ராம-கிருஷ்ணன்: சமுதாயக் குறியீடு
பொது வாழ்க்கை பல முரண்பாடுகள் நிரம்பியது. தன்னைப்பற்றி பிறர் என்ன கூறுகிறார்கள் என்பதை லட்சியம் செய்யத் தேவையில்லை. இருப்பினும் தன் மேல் சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைத்தே ஆக வேண்டும். ஏனெனில் நற்பெயர்தானே பொது வாழ்க்கைக்கான அஸ்திவாரம். கிருஷ்ணனது வாழ்வில் ‘சியமந்தகமணி’ அத்தியாயமே இதற்கான சிறந்த உதாரணம். அதை அணிந்துச் சென்ற சத்ரஜித்தின் சகோதரன் இறந்து கிடந்தான். அதற்காக திருடன், கொலைகாரன் என்று கண்ணன்மீது பழி சுமத்தினான் சத்ரஜித். உடனே கண்ணன், இன்னும் இருபத்தோரு நாட்களில் தான் அந்த நகையைக் கண்டுபிடிக்காவிட்டால் தான் மீண்டும் துவாரகைக்குத் திரும்பி வரப்போவதில்லை என சபதம் செய்தான்.