சிவ-ராம-கிருஷ்ணன்

சிவ-ராம-கிருஷ்ணன்: சமுதாயக் குறியீடு

பொது வாழ்க்கை பல முரண்பாடுகள் நிரம்பியது. தன்னைப்பற்றி பிறர் என்ன கூறுகிறார்கள் என்பதை லட்சியம் செய்யத் தேவையில்லை. இருப்பினும் தன் மேல் சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைத்தே ஆக வேண்டும். ஏனெனில் நற்பெயர்தானே பொது வாழ்க்கைக்கான அஸ்திவாரம். கிருஷ்ணனது வாழ்வில் ‘சியமந்தகமணி’ அத்தியாயமே இதற்கான சிறந்த உதாரணம். அதை அணிந்துச் சென்ற சத்ரஜித்தின் சகோதரன் இறந்து கிடந்தான். அதற்காக திருடன், கொலைகாரன் என்று கண்ணன்மீது பழி சுமத்தினான் சத்ரஜித். உடனே கண்ணன், இன்னும் இருபத்தோரு நாட்களில் தான் அந்த நகையைக் கண்டுபிடிக்காவிட்டால் தான் மீண்டும் துவாரகைக்குத் திரும்பி வரப்போவதில்லை என சபதம் செய்தான்.

சிவ-ராம-கிருஷ்ணன்: விரோதிகளின் மத்தியில்

தனி மனிதனாக நம்மால் நேர்மையாக நிமிர்ந்து நிற்க முடியும். ஆனால் சமூக வாழ்க்கைக்கு இது சாத்தியப்படாது. தீய சக்திகளை வெற்றிகொள்ள பற்பல உத்திகளைக் கையாள வேண்டும். நம்மால் கிருஷ்ணனிடத்தில் தொலைநோக்கும், புத்திசாலித்தனமும் மிளிர்வதைப் பல இடங்களில் காணமுடிகிறது. பாண்டவர்களிடத்தே நட்புபாராட்டுவதற்கு முன்பே, மாற்றத்திற்கான விதையை விதைத்துவிட்டான்.

சிவ-ராம-கிருஷ்ணன்: எக்காலத்துக்குமானவன்

அக்ரூரர் கோகுலத்துக்கு வந்து கிருஷ்ணனை 'தனுர்யாகத்துக்கு' அழைத்துச்செல்ல வருகையில், அவன் தனது வளர்ப்புத் தாய்-தந்தையரான யசோதை-நந்தகோபரிடமிருந்து விடைபெற்றுச் செல்கிறான். அவனது சகோதரனான பலராமனும் அவனுடன் கூடச்செல்கிறான். மதுரா நகருக்குள் பிரவேசிக்கையிலே அவ்விருவரும் அரண்மனை சலவைக்காரனை சந்திக்கின்றனர். கண்ணனும், பலராமனும் அரச குடும்ப விருந்தினராயினும், அவர்கள் அச்சலவைக்காரனிடத்தில் புத்தாடைகளைக் கேட்கையில், அவன் அவ்விருவரையும் கௌரவக் குரைச்சலாக நடத்திவிடுகிறான். கிருஷ்ணன் உடனடியாக அவனை எதிர்த்து நிற்கிறான். எவராயினும் அவனுக்குக் கவலையில்லை.

சிவ-ராம-கிருஷ்ணன்: தர்மத்திற்குத் தோள்கொடுத்தல்

மஹாபாரதத்தின் மீதுள்ள ஈர்ப்பினால் 1970க்களில் திரு எஸ். எல். பைரப்பா அவர்கள் 'பர்வா' எனும் தமது நாவலை வெளியிட்டார். அதனுள் மஹாபாரதத்தில் பொதிந்துகிடக்கும் பல அற்புதமான அம்சங்களைத் தவிர்த்து, அவ்விதிகாசத்தில் இடம்பெறும் மனிதர்கள் பற்றின கதையாக அதனை முன்வைத்தார். 'பர்வா' நாவலில் கண்ணனைப் பற்றி விதுரன் திருதிராஷ்டிரன் இடத்தில், "கண்ணனைப் பற்றி நீ தவறாக புரிந்து வைத்திருக்கிறாய். பாண்டவர்கள் அனைவரும் போரில் மாண்டுவிட்டாலும் கூட அவன் குந்தியையோ அல்லது த்ரௌபதியையோ அரியணையில் அமரச் செய்வானே ஒழிய, உனது பொல்லாத புதல்வர்களை அவன் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டான்!", என்கிறான்.

சிவ-ராம-கிருஷ்ணன்: கிருஷ்ணனின் பிறப்பு

முன் அத்தியாயங்களில் நாம் இதுவரையில், சிவன் எவ்வாறு ஒரு தனி நபருக்கான அடையாளமாகவும், ராமன் எவ்வாறு ஒரு குடும்பஸ்தருக்கான அடையாளமாகவும் விளங்கினார்கள் என்பதைப் பற்றிப் பார்த்தோம். நாம் இப்போது கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றையும், அவன் எவ்வாறு ஒரு சமூகப் பிரதிநிதியாக தன்னை முன்னிலைப் படுத்தினான் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.

சிவ-ராம-கிருஷ்ணன்: உலகம் ஒரு குடும்பம்

அயோத்தியா காண்டத்தில் ராமனுக்கும் அந்நாட்டு மக்களுக்குமான பரஸ்பர அன்பு நன்றாய் புலப்படுகிறது. அவன் அவர்களை சந்தித்து அவர்களது சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்வான். அவர் சிரித்தால் தான் அகமகிழ்ந்தும், அவர் துக்கப்பட்டால் தான் துயர்வுற்றும் இருந்தான். ஒரு நாள்கூட அவர்களில் எவரையேனும் காணாமல் இருந்தால், அவர்களைக் காணவில்லையே என ஏங்குவான். அவர்களும் ராமனை ஒரு தினமேனும் சந்திக்காதிருந்தால் எதையோ இழந்துவிட்டதாகவே எண்ணுவார்கள். மொத்தத்தில் ராமன் தன் பிரஜைகளை சந்திக்காத நாளென்பதே கிடையாது; அதற்கான சாத்தியமும் குறைவானதே! 

சிவ-ராம-கிருஷ்ணன்: ராமனின் குடும்பப் பண்புகள்

தசரதன் ராமனைக் காட்டிற்குச் செல்லும்படி அறிவித்ததை ராமன் கௌசல்யா தேவியினிடத்தில் தெரிவித்தபின் அவளை ராமன் தேற்றுகிறான். அப்போது கௌசல்யா தேவியை தகப்பனைவிட தாயே நூறு மடங்கு உயர்ந்தவளென்றும், அதனால் தன் இச்சைப்படி ராமன் அவளையும் காட்டிற்குக் கூட்டிச் செல்ல வேண்டும் என்றும் கூறுகிறாள். ஆனால், இவ்விதம் நிகழ்ந்துவிட்டாலோ குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுவிடும். இதனை உணர்ந்த ராமன் தார்மீகமான, சாதுரியமான வழியில் அவனது தாயைக் கையாளுகிறான். அவன் அவளிடம், “முதலில் தாங்கள் என் தந்தைக்கு மனைவி, அதன் பிறகே எனக்குத் தாய். அதனால் தாங்கள் மகனுடன் இருப்பதைவிட தங்களது கணவனுடன் வசிப்பதே சாலச் சிறந்தது.

சிவ-ராம-கிருஷ்ணன்: குடும்ப சித்தாந்தம்

சிவனை வர்ணிக்கையிலே, நாம் அவனது பண்பு மற்றும் வடிவினை எடுத்து விளக்காமல், அவனது உருவகங்களையே எடுத்து விளக்கினோம். ஏனெனில் மனித இயல்பினைப் புரிந்துகொள்வதென்பது சுலபமான காரியமல்ல. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே பொதுவான பல தன்மைகளைக் காண முடிகிறது.

நமது சம்பிரதாயங்களில், சிவன் ‘அவதாரம்’ ஏற்பதில்லை. மாறாக, விஷ்ணுவோ பல அவதாரங்கள் ஏற்று வருகிறான். இதற்கென்ன காரணம்? நாம் குடும்பத்திலோ அல்லது ஓர் அமைப்பிலோ வெவ்வேறு கதாபாத்திரங்களாக அங்கம் வகிக்கிறோம். ஆனால் ஒரு தனி நபராக, நாமே நம்மிடத்தில் நடிக்க வேண்டிய தேவையில்லை. தனி மனித லட்சணத்திற்கான அவ்வடையாளமாய் சிவன் விளங்குகிறான்.

சிவ-ராம-கிருஷ்ணன்: சிவனின் குறியீடுகள்

சிவன் தனது ஒரு கையில் உடுக்கையை ஏந்தி நிற்கிறான். லயத்தின் தலைவன் லய வாத்தியம் வாசிக்கிறான். சமஸ்கிருதத்தின் அடிப்படை ஆதாரமான ‘மஹேஷ்வர-ஸூத்திரங்கள்’ சிவன் தனது உடுக்கையைத் தட்டுகையிலேயே ஏற்பட்டன என்று நம்பப்படுகிறது. சிவன் தனது உடுக்கையை ஒலிக்கச் செய்கையிலே, தமிழ் ஒரு பக்கமும் சமஸ்கிருதம் மற்றொரு பக்கமுமாக வெளிவந்தன என்ற அழகான ஒரு கருத்தினைத் தமிழர்கள் குறிப்பிடுவார்கள். உடுக்கையைக்கொண்டு சிவன் வெளியில் ஒலி எழுப்புகிறார், எனினும் அவர் உள்ளத்திலோ என்றும் அமைதி நிலவுகிறது – உண்மையில் சிவனது உடுக்கை ஒரு விசித்திரமான குறியீடாகும். கன்னட எழுத்தாளரான திரு டி. வி.

சிவ-ராம-கிருஷ்ணன்: மூன்று தத்துவங்கள்

இந்திய சம்பிரதாயங்களில் சிவன், ராமன், கிருஷ்ணன் எனும் தெய்வங்களை கற்றோரும், மற்றோரும் தொன்றுதொட்டு வணங்கி வருகின்றனர். ராமனும், கண்ணனும் வரலாற்றுக் கதாநாயகர்களெனில், சிவனோ ஒரு புராண புருஷன் ஆவான். ஆத்திகராயினும், நாத்திகராயினும் இம்முப்பெரும் தெய்வங்களின் கொள்கைகளைக் கடைபிடிப்பதன் மூலம் பெரிதும் பயன்பெறலாம். இதுவே சிவ-ராம-கிருஷ்ணர்களின் தன்மையாகும்.